• Download mobile app
16 Apr 2024, TuesdayEdition - 2988
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ELGi நிறுவனம் ‘இந்தியா ஸ்டோன்மார்ட் 2024’ இல் அதன் மேம்படுத்தப்பட்ட போர்ட்டபிள் ஸ்க்ரூ கம்ப்ரசர்கள் தொகுப்பை வெளியிட்டுள்ளது

February 3, 2024 தண்டோரா குழு

உலகின் முன்னணி ஏர் கம்ப்ரசர் உற்பத்தியாளர்களில் ஒன்றான Elgi எக்யூப்மெண்ட்ஸ் (BSE: 522074 NSE: ELGIEQUIP) இன்று,இந்தியாவின் ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் எக்சிபிஷன் அண்டு கன்வென்ஷன் சென்டரில் (JECC) இந்தியா ஸ்டோன்மார்ட் 2024 இன் 12வது பதிப்பில், PG 550-215 என்னும் டிராலியில்-நிறுவத்தக்க போர்ட்டபிள் ஸ்குரூ ஏர் கம்பிரஸர் தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது.

வெளிப்புற இயந்திரங்கள் பகுதி B இல், ELGi பூத் 6 இல் இது காட்சிப்படுத்தப்பட்டது. மேலும், ELGi இன் மின்சார-ஆற்றலில் இயங்கும் PG110 E, PG 55 E மாடல்களுடன் சுரங்கத் தொழில்துறைக்கான PG 75 E போர்ட்டபிள் ஏர் கம்பிரஸர்களும் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த சர்வதேச ஸ்டோன் இண்டஸ்ட்ரி வர்த்தக கண்காட்சியின் 2024 பதிப்பில் 30,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள கல் தொழிலைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பங்குபெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள PG 550-215 கட்டுமானம் மற்றும் சுரங்கத் துறைகளில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் லாபத்தை வழங்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்தக் கம்பிரஸரின் 3-நிலை காற்று வடிகட்டுதல் அமைப்பு உகந்த செயல்திறனை செயல்படுத்துகிறது,அதே நேரத்தில் ஒருங்கிணைந்த கண்ட்ரோல் பேனல் மேம்பட்ட பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் துளையிடுபவருக்கு நட்பார்ந்த செயல்பாடுகளை உறுதி செய்கிறது.

பெரிய கதவுகள் மற்றும் வலுவான கனோபியை உள்ளடக்கிய கம்பிரஸரின் அப்டைம் வடிவமைப்பு, எளிதான பராமரிப்பு, மேம்பட்ட ஆயுள் மற்றும் தீவிர தட்பவெப்ப நிலைகளிலிருந்து பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்கிறது.கூடுதலாக, ELGi இன் இந்திய அளவிலான சேவை மையங்கள் மற்றும் பயிற்சி பெற்ற சேவை தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தடையற்ற செயல்பாடுகளை உறுதி செய்கின்றன.

மின்சாரத்தில் இயங்கும் PG 110 E, 55 E, மற்றும் 75 E கம்பிரஸர்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை பளிங்கு, கிரானைட் மற்றும் புளு மெட்டல் குவாரிகளில் மின்சாரம் அணுகக்கூடிய மற்றும் உமிழ்வு இல்லாத செயல்முறைகள் தேவைப்படும் நிலைகளில், முழுவதும் நிலையான அழுத்த பயன்பாடுகளில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டுமான மற்றும் சுரங்க தொழில் வாடிக்கையாளர்களுக்கு உயர் செயல்திறன் கொண்ட கம்பிரஸ்டு ஏர் தீர்வுகளை வழங்க ELGi உறுதிபூண்டுள்ளது. சிறந்த வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் கம்பிரஸ்டு ஏர் தொழில்நுட்பத்தில் 63 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், ELGi இன்று 120+ நாடுகளில் செயலாற்றி வருகிறது. ELGi ஆனது ஆயில்-லூப்ரிகேட்டட் மற்றும் ஆயில்-ஃப்ரீ ரோட்டரி ஸ்க்ரூ கம்ப்ரசர்கள், ஆயில்-லூப்ரிகேட்டட் மற்றும் ஆயில்-ஃப்ரீ ரெசிப்ரோகேட்டிங் கம்ப்ரசர்கள் மற்றும் டிரையர்கள், ஃபில்டர்கள் மற்றும் டவுன்ஸ்ட்ரீம் ஆக்சஸரீஸ்கள் வரையிலான கம்பிரஸ்டு ஏர் தீர்வுகளை வழங்குகிறது. அதிநவீன உற்பத்தி அலகுகள் மற்றும் 400+ கம்பிரஸ்டு ஏர் அமைப்புகளின் தயாரிப்பு போர்ட்ஃபோலியோவுடன், ELGi உலகளவில் 2+ மில்லியன் நிறுவல்களில் நம்பகத்தன்மை, செயல்திறன் மற்றும் செலவு-செயல்திறன் ஆகியவற்றை மறுவரையறை செய்கிறது.

நிறுவனம் மற்றும் அதன் தயாரிப்புகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, http://www.elgi.com தளத்தைப் பார்வையிடவும்.

மேலும் படிக்க