• Download mobile app
23 Apr 2024, TuesdayEdition - 2995
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வேலூர் அருகே தோல் கழிவுநீரைக் குடித்து ஆயிரக்கணக்கான வாத்துகள் பலி

July 14, 2016 வெங்கி சதீஷ்

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த அயித்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி(32). இவருக்குச் சொந்தமான சுமார் நான்காயிரம் வாத்துக்களை கொம்மேஸ்வரம் பாலாற்றின் பாலத்தின் அருகில் குடில் அமைத்து வளர்த்து வந்தார்.

பாலாற்றின் சேற்றுப்பகுதியில் மேய்ந்து புழு பூச்சிகளை உண்ணும் வாத்துக்கள் பின்னர் பாலாற்றில் குட்டை போல் தேங்கிநிற்கும் நீரைக் குடிப்பது வழக்கம். கடந்த நான்கு மாதங்களாக இவ்வாறு வளர்ந்துவந்த வாத்துக்கள் நேற்று திடீரென மயங்கி விழத்துவங்கின.

இதையடுத்து அதற்கான காரணத்தை பார்த்த போது நேற்று மாலை வாத்துக்கள் குடித்த நீரில் தோல் தொழிற்சாலையின் கழிவு நீர் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் கால்நடை மருத்துவரை அழைத்து வந்து வைத்தியம் செய்து காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் சுமார் 3,500 வாத்துக்கள் இறந்து போனது. இதையடுத்து கோபியும் அவரது உறவினர்களும் இறந்த வாத்துக்களை ஆற்றங்கரை அருகிலேயே குழி தோண்டிப் புதைத்தனர்.

மேலும் இன்று காலையும் சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட வாத்துக்கள் இறந்ததால் அதன் உரிமையாளர் கோபி மிகுந்த சோகத்துடன் காணப்பட்டார். ஏற்கனவே பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் அப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில் தற்போது தோல் தொழிற்சாலை கழிவுகளால் சுமார் நான்காயிரம் வாத்துக்கள் உயிரிழந்திருப்பது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நடவடிக்கைகள் குறித்து சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

கடந்த ஒரு வாரகாலமாகவே பாலாற்றில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. இந்நிலையில் நேற்றும் இன்றும் வாத்துகள் இறந்துள்ளன எனில் இந்த நீரைக் குடிக்கும் மக்களின் நிலை என்ன என்பதே தற்போது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.

மேலும் படிக்க