• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துபாயில் கடலுக்கு கீழ் அமைக்கப்படவுள்ள டென்னிஸ் மைதானம்

June 11, 2016 தண்டோரா குழு

துபாய் நகரம் உலகில் மிக அதிகளவில் சுற்றுலா பயணிகளைக் கவர்ந்து வரும் நகரம் என்பதுடன் அங்குள்ள உலகின் மிக உயரமான பூர்ஜ் கலிஃபா கட்டடம் மற்றும் பால்ம் தீவுகள் என்பவை உலகப் புகழ் பெற்றவை.
ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் அங்கே சென்று தங்கள் விடுமுறை நாட்களைச் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேலும் அந்நாடு உலகில் உள்ள பணக்கார நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

மக்கள் மனதைக் கவரும் வண்ணம் கடலுக்கு கீழ் உணவகம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதற்கு ஒருபடி மேலும் சென்று உலகிலேயே முதன் முறையாகக் கடல் வாழ் உயிரினங்கள் சூழ கடலுக்கடியில் டென்னிஸ் மைதானம் ஒன்று துபாயில் அமைக்கப்படவுள்ளது.

இது போலிஷ் கட்டடக் கலைஞரான 30 வயதுடைய கொட்டாலா என்பவரது கனவுத் திட்டம் ஆகும். இதை நிறைவேற்றப் பலத்த சவால்கள் சந்திக்க நேரும் என்று சில பொறியாளர்கள் கருத்துத் தெரிவித்தனர். 30 அடி நீளமும் 30 அடி அகலமும் கொண்ட வளைந்த கண்ணாடிக் கூரையும், கணிசமான பார்வையாளர்கள் உள்வாங்கப் போதுமான இடத்தையும் நிர்மாணிப்பது முக்கிய சவாலாக இருக்கிறது.

குறிப்பாக மிக நீண்ட வலிமையான வளைந்த கண்ணாடிக் கூரையை உற்பத்தி செய்து அதனைக் கொண்டு அமைக்கப்படும் கூரை தண்ணீரின் அழுத்தத்தால் உடைந்து விடாமல் இருப்பது மிகவும் சாத்தியமற்றதாகவே தோன்றுகிறது என்று பொறியாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், இந்த டென்னிஸ் மைதானத்தை அமைக்க சுமார் 1.7 முதல் 2.5 கோடி அமெரிக்க டாலர் வரை செலவிடப்படும் எனவும் கூறப்படுகிறது. இத்திட்டம் சூழலியல், விளையாட்டு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய மூன்றையும் உடையக் கலவையாகும். இது வலுவான வணிக திறனை கொண்ட திட்டமாகும். ஆனால் இந்தத் திட்டத்திற்கு உதவ முதலீட்டாளர்கள் ஒருவரும் முன்வரவில்லை என்று கொட்டாலா தெரிவித்துள்ளார்.
பூகம்பம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை தாக்குதலை எதிர்கொள்ளும் சக்தியுடன் இந்த மைதானம் அமைக்கப்பட வேண்டும். மேலும் அவசர நேரங்களில் கரைக்கு பத்திரமாகச் செல்ல சரியான ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

எனினும், மிகக் கடின உழைப்பினாலும் திட்டத்தாலும் துபாயில் பொறியியல் சின்னங்களான பூர்ஜ் கலிஃபா கட்டடம் மற்றும் மனிதனால் உலகில் செயற்கையாக முதலில் நிர்மாணிக்கப்பட்ட மிக அழகான பெரிய தீவுக் கூட்டமான பால்ம் ஆகியவை உருவாக்கப்பட்டது.

அதனால் கடலுக்கு அடியில் டென்னிஸ் விளையாட்டு மைதானம் அமைப்பது ஒன்றும் இயலாத காரியம் என்று சொல்ல முடியாது. மேலும். நம்பிக்கை, சரியான திட்டமிடுதல், மற்றும் நேரத்தைச் சரியாக பயன்படுத்தி அவர்கள் கனவு திட்டத்தை நனவாக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் படிக்க