• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

85 மொழிகளில் பாடி உலக சாதனை படைக்க முயற்சிக்கும் சிறுமி

November 13, 2017 தண்டோரா குழு

துபாயைச் சேர்ந்த 12 வயது சிறுமி சுமார் 85 மொழிகளில் பாடல்கள் பாடி உலக சாதனை படைக்க முயற்சி செய்து வருகிறாள்.

துபாயிலுள்ள இந்திய உயர்நிலைப்பள்ளியில் சுசேதா சதீஷ் என்னும் 12 வயது சிறுமி, ஏழாவது வகுப்பு படித்து வருகிறாள். அவள் இந்திய நாட்டின் கேரளா மாநிலத்தை பூர்விமாக கொண்டவள். இந்தி,மலையாளம், தமிழ் மொழிகளில் பாடுகிற ஆற்றல் உடையவள்.

அவளுடைய பள்ளியில் நடைபெறுகிற பாட்டு போட்டிகளில், ஆங்கில மொழி பாடல்களையும் பாடியுள்ளாள்.கடந்த ஒரே வருடத்தில், சுமார் 80 மொழிகளில் பாடும் திறனை பெற்றுள்ளாள்.இன்னும் 5 புதிய மொழிகளில் பாட கற்றுக்கொள்ள வேண்டும் என்று தீவிரமாக உள்ளாள். இந்நிலையில், வரும் டிசம்பர் மாதம் 29ம் தேதி, சுமார் 85 மொழிகளில் பாடல்கள் பாடி உலக சாதனை படைக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளாள்.

“ஜப்பான் மொழியில் தான் என்னுடைய முதல் பாடலை பாடினேன். என் தந்தையின் நண்பர் ஒரு வருடத்திற்கு முன்பு துபாய் வந்தார்.அவர் எங்கள் வீட்டுக்கு வந்தபோது, ஜப்பானிய பாடல் ஒன்றை பாடினார். அந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை கற்றுக்கொண்டேன்.

வழக்கமாக ஒரு பாடல் கற்றுக்கொள்ள சுமார் இரண்டு மணிநேரம் எடுத்துக்கொள்கிறேன்.அதை உச்சரிக்க எளிதானது என்றால், அதை வேகமாக கற்றுக்கொள்ள முடியும். அது ஒரு நீண்ட பாடல் இல்லையென்றால், அரை மணி நேரத்தில் கற்றுக்கொள்ள முடியும். ஜெர்மன், பிரெஞ்சு, ஹங்கேரி ஆகிய மொழிகளில் உள்ள பாடல்கள் கடினமாவை” என்று அந்த சிறுமி தெரிவித்தாள்.

கடந்த 2008ம் ஆண்டு, ஆந்திரப் பிரதேச மாநிலத்தின், காந்தி ஹில்ஸ்பகுதியில், சுமார் 76 மொழிகளில் பாடிய கேசிராஜு ஸ்ரீனிவாஸ் கின்னஸ் என்பவர் உலக சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க