• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வறட்சி நிவாரணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் – ஓ.பன்னீர்செல்வம்

February 1, 2017 தண்டோரா குழு

விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம் வங்கிக்கணக்கில் விரைவில் செலுத்தப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இந்தாண்டிற்கான சட்டப்பேரவை கூட்டம் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரையுடன் ஜனவரி 23ம் தேதி துவங்கியது. தொடர்ந்து மக்கள் பிரச்சனைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது. ஜல்லிக்கட்டு நடத்த கொண்டு வரப்பட்ட சட்ட முன் வடிவு நிறைவேற்றப்பட்டது.

புதன்கிழமை (பிப்ரவரி 1) கூடிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தனி அதிகாரிகளின் பணிகாலம் ஜூன் 30 -ம் தேதி வரை நீட்டிப்புக்கான மசோதா நிறைவேற்றப்பட்டது.

அதன் பின், மத்திய அரசாங்கம் கொண்டு வந்த நீட் தேர்விற்கு தமிழகத்தில் தடை விதித்து ,மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர பழைய முறையையே பின்பற்றப்படும் என தமிழக அரசாங்கத்தால் கொண்டு வந்த சட்ட முன்வடிவு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

இதனை அடுத்து பருவமழை பொய்த்த காரணத்தினால் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம், அவர்களின் வங்கிக் கணக்கில் ஒரே தவணையாக விரைவில் செலுத்தப்படும் என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

மேலும் படிக்க