• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாணவர்களுக்குப் போதை அளிக்கும் பேனா பெற்றோர் கலக்கம்

July 29, 2016 தண்டோரா குழு

மாணவர்கள் போதை ஏற்றிக் கொள்வதற்கு ”ஹூகா பேனா” என்ற ஒரு பேனா பிரபலமாகி வருவது பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு அருகே போதை சாக்லேட்டுகள் விற்று வருவது தெரிய வந்ததை அடுத்து, தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுத்தது. பல்வேறு அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வியாபாரிகள் பலர் பிடிக்கப்பட்டனர்.

ஒவ்வொரு முறையும் பள்ளிகள் இருக்கும் இடத்தில் இது போன்று போதைப் பொருட்கள் வெவ்வேறு வடிவில் விற்கப்பட்டு வருவது பெற்றோருக்கு அதிர்ச்சி அளித்து வருகிறது.

தற்போது ஐதராபாத் போன்ற நகரங்களில் ”ஹூகா பேனா” என்ற ஒன்று அதிகளவில் விற்கப்பட்டு வரும் செய்தி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அரசும் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒரு மாணவன் பேனாவை நுகர்ந்து பார்த்துக் கொண்டு இருந்துள்ளான். இதைப் பார்த்து சந்தேகப்பட்டு ஆசிரியர்கள் அந்த மாணவனைப் பரிசோதித்த போது, அந்த மாணவன் பேனாவைப் பயன்படுத்தி போதை வஸ்துவை நுகர்ந்து கொண்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கடுமையான சோதனைகளில் ஈடுபட்டு அவற்றை ஒழிக்கப் பாடுபட்டு வருகின்றனர்.

எலக்ட்ரானிக் சிகரெட் என்ற பெயரில் விற்கப்பட்டு வரும் இது, பேனாவுடன் சார்ஜர் மற்றும் திரவம் நிரப்பும் ஒரு ஃபில்லர் கொடுக்கப்படுகிறது. இந்த ஃபில்லரில் 1.6 எம்எல் திரவத்தை நிரப்பலாம். இந்தப் பேனாவை மூன்று மணி நேரம் சார்ஜ் செய்து, இரண்டு நாட்களுக்குப் பயன்படுத்தலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்பு இந்தப் போதை வஸ்துவை நுகருவதற்கு மாணவர்கள் பார்லருக்கு சென்று கொண்டு இருந்தனர். தற்போது இந்தப் பேனா எளிதாகக் கிடைப்பது தினமும் போதை ஏற்றிக் கொண்டு வாழ்க்கையைப் பாலாக்கிக்கொள்ள வசதியாக இருப்பதாகப் பெற்றோர் பலர் குற்றம் சாட்டுகின்றனர். கல்லூரி, பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளும் இதற்கு அடிமையாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இந்தப் பழக்கத்திற்கு அடிமையான மூவர் இறந்ததையடுத்து போலீசார் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், ஐதராபாத்தில் காபி, ரெஸ்ட்டாரன்ட் வைப்பதற்கு அனுமதி பெற்று இது போன்று ஹூகா மையங்களையும் நடத்தி வருவது தெரிய வந்துள்ளது. இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரிடம் இருந்தும் தற்போது கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் படிக்க