• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டொனால்டு டிரம்ப்பை மோசமானவராக லத்தீன் அமெரிக்க நாடுகள் கருத வேண்டாம் –ஒபாமா

November 21, 2016 தண்டோரா குழு

டொனால்டு டிரம்ப்பை மோசமானவராகக் கருத வேண்டாம் என்று லத்தீன் அமெரிக்கா மற்றும் உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவுறுத்தியுள்ளார்.

ஆசிய பசிபிக் பொருளாதார மாநாடு தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் நடைபெற்று வருகிறது. தலைநகர் லிமாவில் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொண்டார்.

லிமாவில் இளைஞர்களுடன் திங்கள்கிழமை நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் ஒபாமா பேசியதாவது;

வெள்ளை மாளிகையில் பணியாற்ற அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப்புக்குத் தகுதியில்லை என்ற தவறான முடிவுக்கு வர வேண்டாம். டிரம்பை மோசமானவராகக் கருத வேண்டாம். நிர்வாகம் எப்படி நடத்துகிறார் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்.

உலக நாடுகள் அமைதியாக, செழிப்புடன் ஒற்றுமையாக வாழும் பொருட்டு அவருடைய நிர்வாகம் இருக்கிறதா, இல்லையா என்று பார்த்து பின்னர் தீர்மானியுங்கள். புதிய அதிபர் குறித்து உலக நாடுகள் உடனடியாக எந்த முடிவுக்கும் வர வேண்டாம். அதிலும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு இந்த வேண்டுகோள் முக்கியமானதாகும் என்றார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் டிரம்ப்பைக் கடுமையாக விமர்சித்து வந்த ஒபாமா, தேர்தலுக்குப் பிறகு அவருக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க