October 27, 2017
தண்டோரா குழு
இரண்டாவது முறையாக சீன நாட்டின் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜீ ஜின்பிங்கிற்கு அமெரிக்க குடியரசு தலைவர் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சீன நாட்டின் குடியரசு தலைவர் ஜீ ஜின்பிங்மீண்டும் குடியரசுத்தலைவராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார்.அவருக்கு அமெரிக்க குடியரசு தலைவர் டொனால்ட் டிரம்ப், தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
அமெரிக்க குடியரசு தலைவர் டிரம்ப் தனது வாழ்த்து செய்தியில் கூறியதாவது:
ஜீ ஜின்பிங்சீனாவின் பிரதிநிதியாக இருக்கிறார், நான் அமெரிக்காவின் பிரதிநிதியாக இருக்கிறேன். இரு நாடுகளுக்கு இடையே ஏதாவது மோதல் இருக்கும். ஆனால் எங்களுக்கிடையே ஒரு நல்ல உறவு இருக்கிறது. சிலர் அவரை ‘சீனாவின் அரசர்’ என்றும் கூட அழைக்க முடியும்”. எனக் கூறியுள்ளார்.