October 13, 2017
தண்டோரா குழு
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று சந்தித்தார்.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இன்று காலை ஸ்டானிலி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது மருத்துவமனையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அங்கிருந்த பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது.மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முன்னதாகவே சட்டசபை தேர்தல் வரை வாய்ப்புள்ளது” என்றார்.