• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கலில் வெவ்வேறு இடங்களில் 3 பேர் வெட்டி படுகொலை

November 24, 2017 தண்டோரா குழு

திண்டுக்கல்லில் வெவ்வேறு இடங்களில் 3 துப்புரவு பணியாளர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் சோலைஹால் நெட்டு தெருவில் வசித்து வருபவர்கள் பாலமுருகன், சரவணன், வீரன் என்ற வீரையா. இவர்கள் 3 பேரும் தனியார் நிறுவனத்தில் துப்புரவுப் பணியாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இதில் சரவணன் (40) மற்றும் வீரன் என்ற மதுரைவீரன் (42) அண்ணன் தம்பி ஆவார்கள். இவர்கள் இன்று (நவ 24) காலை வழக்கம் போல் துப்புரவுப் பணிக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் பாலமுருகன் (38) திண்டுக்கல் சிலுவத்தூர் சாலையில் உள்ள டீச்சர்ஸ் காலணியில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு இரண்டு இருசக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி அறிவாள் போன் பயங்கர ஆயுதங்களால் பாலமுருகனை சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே பாலமுருகன் உயிரிழந்தார்.

இதனையடுத்து பேருந்து நிலையிலம் அருகே உள்ள சௌராஸ்டிரா புரத்தில் துப்புரவு பணியிலிருந்த சரணனை அதே கும்பல் வெட்டி சாய்த்தது. இதனையடுத்து நாகல் நகர் ரயில் நிலையம் அருகே உள்ள பாவா லாட்ஜ் அருகே துப்புரவு பணியிலிருந்த வீரன் என்ற மதுரைவீரனை அதே கும்பல் வெட்டி சாய்த்தது.

திண்டுக்கல்லில் இதுவரை இல்லாத அடுத்தடுத்து 3 வெவ்வேறு இடங்களில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா பாணியில் இச்சம்பவம் நடைபெற்றிருப்பது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த 3 துப்பரவு பணியாளர்கள் உடலை கைப்பற்றி உடற்கூரு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் பார்வையிட்டார். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் முன்பகை காரணமாக 3 கொலை நடைபெற்றிருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க