• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விநோதமான திருமணம்.

July 16, 2016 தண்டோரா குழு

இன்டோரைச் சேர்ந்த ஆதித்யா திவாரி திருமணமாகாத 28 வயது மென்பொறியாளர். சராசரி இளைஞன் போலன்றி சிறிது வித்தியாசமான எண்ணங்கள் உடையவர்.

திருமணத்திற்கு முன்பே ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதுவும் ஒரு குறைபாடுள்ள குழந்தையாக இருக்கவேண்டுமென்பதும் இவரது அவா. கல்யாணமாகாதவர்களெனில் குழந்தையை தத்தெடுக்க வயது வரம்பு 30 என விதி உள்ளது.

ஆகையால் இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டது. அதன்பின் போனவருடம் அக்டோபர் மாதம் வயது வரம்பு 25 ஆகக் குறைக்கப்பட்டது.

விதி தளர்த்தப்பட்டதால் பிறவியிலேயே குறைபாடுள்ள, மற்றும் இதயத்தில் ஓட்டை உள்ள, ஒன்றரைவயது ஆண் குழந்தையை ஓராண்டு போராட்டத்திற்குப் பின் தத்தெடுத்துள்ளார். அதற்கு அவீன்ஷ் என்ற பெயரும் சூட்டியுள்ளார்.

குழந்தையின் மருத்துவச் செலவிற்கே வருவாயின் பெரும்பகுதி கழிந்துவிடும் என்று பலர் அதைரியப்படுத்தியும் கூட, எந்தப் பெண்ணும் தன்னைத் திருமணம் செய்ய முன்வரமாட்டார் என்று எச்சரித்ததையும் பொருட்படுத்தாது குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்தியுள்ளார்.

அவரது தீவிர வேட்டையின் பயனாக ஒரு இண்டோர் பெண்மணி திருமணத்திற்குச் சம்மதித்துள்ளார். மறுபடியும் தான் ஒரு வித்தியாசமான மனிதர் என்று நிரூபித்துள்ளார்.

அதாவது தனது திருமணத்தில் 10,000 வீடிழந்த மற்றும் அனாதைகளுக்கும், 1000 சுற்றித்திரியும் விலங்குகளுக்கும், மிருகக் காட்சி சாலையில் உள்ள பிராணிகளுக்கும், உணவு வழங்கவேண்டும் என்பதே இவரது விருப்பம்.

விருந்தாளிகளுக்குப் புத்தகங்களும், மருந்துகளும் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். திருமணநாள் நினைவாக 100 மரக்கன்றுகள் நடவும் திட்டமிட்டுள்ளார்.

மிகமிக நெருங்கிய சொந்தங்களை மட்டும் அழைக்கத் திட்டமிட்டுள்ளார். யாராலும் அழைக்கப்படாத மக்களாகிய அனாதைகள், ஏழைகள், வீடு வாசல் அற்றோர் ஆகியோரை அழைத்துக் கௌரவிக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

பிறவிக் குறைபாடுகளைக் கண்டறியும் விழிப்புணர்ச்சி நிகழ்ச்சியும் நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தனக்கு வரப்போகும் மனைவி தன்னைப் போலவே தன் தத்துக் குழந்தையையும் நேசிக்கவேண்டும் என்று எண்ணியதால் மனைவியைத் தேர்ந்தெடுக்க சமயம் ஆகியது என்றார்.

தனது மனைவியாக வரப்போகிறவர் தனது எண்ணத்திற்குத் துணை நிற்பார் என்பதை அறிந்ததில் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க