October 12, 2017
தண்டோரா குழு
டெல்லி தலைமைச் செயலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் திருட்டுபோனது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு சொந்தமான வேகன் ஆர் காரில் இன்று தலைமை செயலகத்துக்கு வந்தார்.பின்னர் தனது காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் பணிகளை முடித்துக் கொண்டு அவர் வீடு செல்ல காரை எடுக்கச் சென்றார்.
அப்போது அவரது காரை அங்கு காணவில்லை.அக்கம்பக்கங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தலைமை செயலகத்தில் அதிக பாதுகாப்பு இருந்தும் முதல்வரின் காரை மர்ம நபர் திருடிச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, திருடு போன கார் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.