• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோடீஸ்வரியான மலாலா

July 5, 2016 தண்டோரா குழு

தான் எழுதிய ஐ ஆம் மலாலா என்ற புத்தகத்தின் விற்பனை மற்றும் பதிப்புரிமை தொகை மூலம் மாலாலா கோடீஸ்வரி ஆகியிருக்கிறார்.

பாகிஸ்தானில், பெண்களின் உரிமைக்காகப் போராடி வந்த மலாலாவின் செயல்களினால் ஆத்திரம் அடைந்த தளிப்பான் தீவிரவாதிகள் கடந்த 2012-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 9-ம் தேதி, அவர் பள்ளிக்கூடத்துக்கு சென்றுவிட்டு வீட்டுக்குப் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்த போது துப்பாக்கியால் சுட்டதில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

தீவிரவாதிகளின் கொலை முயற்சியில் மலாலா மரணத்தின் விளிம்பு வரை சென்று, பின்னர் லண்டனில் சிகிச்சைப் பெற்று குணமடைந்தார். அதைத் தொடர்ந்து அவர் பர்மிங்ஹாமில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவர் தொடர்ந்து பெண் கல்விக்காகவும், பெண் உரிமைக்காகவும் குரல் கொடுத்து வருகிறார்.

இவருக்கு கடந்த 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தனது அனுபவத்தைக் கொண்டு ஐ ஆம் மலாலா என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதினார்.

இந்தப் புத்தகத்தை விற்பனை செய்வதற்காகவும், பதிப்புரிமையைப் பாதுகாப்பதற்காகவும் நிறுவனம் ஒன்றை நிறுவினார். மலாலா மற்றும் அவரது குடும்பத்தினர் இதன் பங்குதாரர்களாக உள்ளனர்.

இந்த நிறுவனத்தின் மதிப்பு கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சுமார் 15 கோடியாக இருந்தது. மேலும், அந்த நிறுவனம் சுமார் 7.4 ரூபாய் கோடி லாபம் ஈட்டியதாகவும் அறிவிக்கப்பட்டது.

மேலும், மலாலா புத்தகத்தின் சொற்பொழிவுகளைப் பயன்படுத்துபவர்கள் இந்த நிறுவனத்துக்குப் பதிப்புரிமை தொகை செலுத்தி வருகின்றனர். இதன் மூலம் மலாலாவின் நிறுவனத்திற்கு வருவாய் ஈட்டி வருகிறது. புத்தகத்தின் விற்பனை மற்றும் பதிப்புரிமை ஆகியவற்றின் மூலம் கிடைத்த தொகையில் தற்போது மலாலா கோடீஸ்வரியாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க