• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கரூர் அரவக்குறிச்சி நெடுஞ்சாலையில் 1100 கோடி ரூபாயுடன் கன்டைனர் லாரி.

July 20, 2016 Venki Satheesh

தமிழகத்தைப் பொறுத்தவரை கன்டைனர் லாரியில் பணம் கொண்டுவந்தாலே பிரச்சனை தான் போல, தேர்தல் சமயத்தில் திருப்பூர் அருகே 570 கோடி ரூபாய் கொண்ட கண்டைனர்கள் பிடிபட்டது.

இது ரிசர்வ்பேங்குக்கு சொந்தமானது எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும், தேர்தல் சமயம் என்பதால் அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று காலை மைசூரில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள ரிசர்வ் வங்கிக் கிளைக்கு பணம் கொண்டுசெல்ல இரண்டு கன்டைனர் லாரிகள் புறப்பட்டன. அவர் கரூர் நெடுஞ்சாலையில் 1,100 கோடி ரூபாயுடன் பழுதாகி நின்றன.

இது பற்றி தகவலர்ந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்தைப் பாதுகாக்க லாரியை சுற்றி ஏ.கே 47 வகை துப்பாக்கியுடன் போலீசார் நிற்கின்றனர். இதையடுத்து கரூர்-அரவக்குறிச்சி இடையே நிற்கும் பண லாரியை பார்க்க மக்கள் ஆர்வத்துடன் குவிந்துவருகின்றனர்.

இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மைசூரில் இருந்து புறப்பட்ட பணம் ஏற்றப்பட்ட இரண்டு கன்டைனர் லாரிகளில் ஒன்று எஞ்சின் கோளாறு காரணமாக இங்கு நிற்பதாகவும் அதற்காக உடன் வந்த ஆயுதமேந்திய காவல்துறையினர் காவலுக்கு இருப்பதாகவும் கண்டுபிடித்தனர்.

இதற்கான அவர்களிடம் ஆவணங்கள் இருப்பதால் உள்ளூர் காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் உதவி வருகின்றனர். பின்னர் எஞ்சின் கோளாறு சரிசெய்யப்பட்டபின் அவர் அனுப்பிவைக்கப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

1,100 கோடி ரூபாய் பணத்துடன் லாரி நிற்பதால் அப்பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.

மேலும் படிக்க