• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் தற்கொலை முயற்சி

January 19, 2018 தண்டோரா குழு

குடும்ப பிரச்னை காரணமாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த விஜய்குமார் என்பவர் கோவையை சேர்ந்த தீபா என்பவரை 12 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துக் கொண்டுள்ளார். தீபா மதுரையில் பேராசியராக உள்ள நிலையில், விஜயகுமார் சட்டப்படிப்பை பாதியிலேயே முடித்து வேலை இல்லாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாகவே விஜய்குமார்-தீபா பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், கோவை குடும்ப நல நீதிமன்றத்தில் தீபா விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.இம்மனு மீதான விசாரணை இன்று நடைப்பெற்றது. இந்த விசாரணைக்கு விஜயகுமார் தனது தாயுடன் வந்துள்ளார்.

இந்த வழக்கு விவகாரத்தில் விஜயகுமாருக்கு உடன்பாடு இல்லாததால், இருவருக்கும் நீதிமன்ற வளாகத்திலேயே வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது, விஜயகுமார் தான் மறைத்து வைத்திருந்த பூச்சி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.உடனே அருகிலிருந்த நீதிமன்ற ஊழியர்கள் விஜயகுமாரை மீட்டு, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகுமார் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குடும்ப பிரச்னை காரணமாக விஜயகுமார் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர். பந்தைய சாலை காவல்துறையினர். வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க