• Download mobile app
22 Mar 2026, SundayEdition - 3693
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசுக் கல்லூரியில் பகத்சிங் பிறந்தநாள் விழா கொண்டாடிய மாணவியின் இடைநீக்கம் ரத்து

October 26, 2018 தண்டோரா குழு

கோவை அரசுக் கல்லூரியில் பகத்சிங் பிறந்தநாள் விழா கொண்டாடிய மாணவியின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை அரசு கலைக் கல்லூரியில்,எம்.ஏ முதலாண்டு படித்து வரும் மாணவி மாலதி.இவர் கடந்த மாதம் 28-ம் தேதி கல்லூரி மைதானத்தில் மாணவ, மாணவிகளுடன் இணைந்து அனுமதியின்றி பகக்சிங் பிறந்தநாள் கொண்டாடியுள்ளதாக கூறப்படுகிறது.இதையடுத்து,கல்லூரி முதல்வரின் ஆணையை மீறி மாணவர்களை அழைத்து கூட்டம் நடத்தியமைக்கு உரிய விளக்கம் தருமாறும்,அதுவரை அம்மாணவியை தற்காலிக இடைநீக்கம் செய்யப்படுவதாக தபால் மூலம் அம்மாணவிக்கு தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டங்கள் எழுந்தன.இந்நிலையில்,மாணவியின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும்,விதிகளின்படி செயல்படுவேன் என கடிதம் எழுதி தருமாறு மாணவி மாலதிக்கு கல்லூரி முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க