August 31, 2018
தண்டோரா குழு
கோவை பேரூர் ஆதினம் பெரியப்பட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் காலமானார்.இவருக்கு வயது 97.
தமிழகத்தின் வயது முதிர்ந்த மடாதிபதியான ராமசாமி அடிகளார் பேரூர் தமிழ் கல்லூரி,தாய் தமிழ் பள்ளியை நிர்வகித்து வந்தார்.காட்டம்பட்டியில்,சாந்தலிங்க அடிகளார் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.இந்த பள்ளிக்கு அப்போதைய தமிழக முதலமைச்சர் காமராஜர் அடிக்கல் நாட்டினார்.இதேபோல,பேரூரில் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அறக்கட்டளையின் மருத்துவமனையும் இயங்கி வருகிறது.இந்நிலையில் கடந்த சில காலங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சாந்தலிங்க ராமசாமி அடிகளார் இன்று மரணமடைந்தார்.