• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரத்தினபுரியில் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து ரயில் மறியல்

December 22, 2017 தண்டோரா குழு

ரத்தினபுரி ரயில்வே தண்டவாளம் அருகேயுள்ள வீடுகளை இடிக்க இன்று(டிச 22) ரயில்வே நிர்வாகம் முயற்சித்ததால் அப்பகுதி மக்கள் ரயில் மறியலில் ஈடுப்பட்டனர்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ரத்தினபுரி ரயில்வே பாதை அருகேயுள்ள சின்ராஜ் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் 40 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் மத்திய அரசின் ஆணைபெற்று குடியிருப்புகளை இடிக்க மத்திய பாதுகாப்பு படை மற்றும் அப்பகுதி காவலர்களின் பாதுகாப்போடு அதிகாரிகள் வந்துள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் கடந்த 40 ஆண்டுகளாக இந்தப்பகுதியில் வசித்து வருவதாகவும்,1992 ஆம் ஆண்டு முதல் சொத்து வரி, மின்சார கட்டணம், முறையாக செலுத்தி வருவதாகவும்,ஆதார்,வாக்காளர்,ரேசன் கார்டு, உள்ளிட்ட அடையாள அட்டைகள் இருப்பதாகவும் மாற்று இடம் வழங்காமல் உடனடியாக காலி செய்யச்சொல்வது கண்டிக்கத்தக்கது என்று ரயில் மறியலில் ஈடுப்பட்டனர்.

இதுசம்பந்தமாக அதிகாரிகள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இருந்து வீடுகளை இடிக்க தடைக்கோரி கடிதம் வாங்கி வந்தால் இடிக்க மாட்டோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அத்தொகுதி எம்.எல்.ஏ பி ஆர் ஜி அருண்குமார் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பேசி கடிதம் கொடுக்கச்சொல்லியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ரயில்பாதையில் இருந்து 40 அடி இடைவெளியுள்ள நிலங்களை மட்டும் எடுக்க விதியிருந்தும், 90 அடி அகலமுள்ள இடத்தை எடுப்பது ஏழை மக்களை பழி வாங்கும் செயல் என்றனர்.

மேலும் படிக்க