• Download mobile app
22 Mar 2026, SundayEdition - 3693
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் நுரையீரல் நோய் தொடர்பான பரிசோதனை முகாம்

November 14, 2018 தண்டோரா குழு

கோவையில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவமனை சார்பில் நுரையீரல் தொற்று நோய்கள் தொடர்பான பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது.இந்த முகாமில் நுரையீரல் பாதிப்புகள் வராமல் தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.குறிப்பாக நுரையீரல் நோய் வராமல் தடுக்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும்,நோய் பாதிப்பு வந்தால் உடனடியாக சரி செய்ய எடுக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

குறிப்பாக புகை பிடிப்பவர்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு தொழிற்சாலையில் இருந்து வரும் நச்சு புகையால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதால் அதனை தடுக்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முறைகள குறித்தும் இந்த முகாமில் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.மேலும் நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறியவும்,அதனை நிவர்த்தி செய்வது குறித்த பரிசோதனையும் இந்த முகாமில் அளிக்கப்பட்டது.இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க