• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறுவாணி குறுக்கே அணை கட்ட, கோவை மலையாள சங்கங்கள் எதிர்ப்பு

September 3, 2016 தண்டோரா குழு

சிறுவாணி குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கேரளாவுக்கு கோவையைச் சேர்ந்த மலையாள சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கோவை மாவட்டத்தில் உள்ள 42 மலையாள சங்கங்கள் ஒன்றிணைந்து கோயமுத்தூர் மலையாள சமாஜம் நிர்வாகிகள் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.அப்போது, சிறுவாணி மற்றும் பவானி ஆற்றின் குறுக்கே புதிய அணைக்கட்டும் திட்டத்தை கைவிடக்கோரி கேரள முதல்வரிடம் மனு அளிக்கப்போவதாக கோயமுத்தூர் மலையாள சமாஜம் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், கேரளா அணைக்கட்டும் செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்ததாக மலையாள சங்கங்கள் கருத்து தெரிவித்தனர். மேலும், அணைக்கட்டும் திட்டத்தைக் கேரள அரசு கைவிட வேண்டும் எனவும் இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு மக்களுக்குக் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காத அவல நிலை ஏற்படும் எனவும் கேரள அரசை வலியுறுத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக, ஓணம் பண்டிகை முடிந்தவுடன் கேரள முதல்வரைச் சந்தித்து சிறுவாணி குறுக்கே அணைக்கட்டும் திட்டத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தப் போவதாக கூறினர்.

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டுவதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கேரளா முதல் கட்ட பணியைத் தொடங்கி உள்ளது. அணைக்கட்ட திட்டமிடப்பட்டுள்ள பகுதியில் கட்டுமானப் பொருட்கள் குவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க