• Download mobile app
22 Mar 2026, SundayEdition - 3693
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காட்டு யானைகளை விரட்டும் முயற்சியில் கும்கி யானைகள்

November 10, 2018 தண்டோரா குழு

கோவை அருகே ஊருக்குள் நுழைந்து வரும் காட்டு யானைகளை விரட்டும் பணியில் கும்கி யானைகள் ஈடுபட்டுள்ளது.

கோவை அடுத்த தடாகம் மற்றும் வரப்பாளையம் பகுதியில் இரண்டு காட்டு யானைகள் நாள்தோறும் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்பகுத்துவதாக அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தனர்.மேலும் உடனடியாக யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டாவிட்டால் போராட்டங்கள் நடத்துவதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்ட முதுமலையில் இருந்து விஜய்,பொம்மன் ஆகிய கும்கி யானைகள் வியாழக்கிழமை வரவழைக்கப்பட்டது.மேலும் இதனுடன் கோவை சாடிவயல் யானைகள் முகாமில் உள்ள ஜான்,சேரன் ஆகிய கும்கி யானைகளையும் கொண்டு அந்த காட்டு யானைகளை விரட்ட முடிவு செய்யப்பட்டு,முதல் கட்டமாக சாடிவயல் முகாமில் இருந்து ஜான்,சேரன் என்ற இரு கும்கி யானைகளும் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு துடியலூர் அடுத்த வரப்பாளையம் கிராம கடை வனப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் வனப்பகுதியில் இருந்து வெளி வரும் காட்டு யானைகளை விரட்ட முடியும் எனவும்,தொடர்ச்சியாக காட்டு யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க