• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இசை தட்டு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளையராஜா வழக்கறிஞர் புகார்

May 12, 2018 தண்டோரா குழு

கோவையில் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்த பாடல்களை உரிய அனுமதியின்றி சி.டி.க்களாக வெளியிட்டு வரும் தனியார் இசை தட்டு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகர காவல்துறை ஆணையரிடம் அவருடைய வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.

கோவை ஆடீஸ் வீதியில் “ஹனி பீ மியூசிக்” என்ற இசைதட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு, இளையராஜாவின் இசை மற்றும் பாடல்களை சி.டியாகவும் இணையதளத்திலும் அனுமதியின்றி வெளியிடுவதாக கூறப்படுகிறது.

வேறு வேறு இசைகளை இளையராஜாவின் இசையுடன் புகுத்தி (DTS format) வெளியிட்டு வருதாகவும்,இதனால் இசை உலகில் இளையராஜவிற்குள்ள நற்பெயர் கெட்டு வருவதாக குற்றம்சாட்டி,இளையராஜாவின் வழக்கறிஞர் சிவசாமி கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

மேலும்,அந்நிறுவனம் வெளியிட்டுள்ள இசைத்தட்டுகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், உரிய அனுமதியின்றி சட்டத்திற்கு முரணாக சி.டி வெளியிட்டு சம்பாதித்த பணத்தை வைத்திருக்கும் அந்நிறுவன உரிமையாளர்கள் வங்கிக் கணக்கையும்,அந்நிறுவனத்தின் வங்கிக் கணக்கையும் முடக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இளையாராஜா பெயரை பயன்படுத்தி சம்பாதித்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதோடு,உரிமையாளர் அந்தோணி முத்துசாமியையும் கைது செய்யுமாறு அம்மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க