• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஆளுநரின் ஆலோசனை கூட்டம்: பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

November 14, 2017 தண்டோரா குழு

கோவை மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீரென ஆலோசனை நடத்தியதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பன்வாரிலால் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். பின்னர் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் இடம்பெற்றுள்ள கோவை மாநகரில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து, அமைச்சர்கள் யாரையும் அழைக்காமல் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆளுநரின் தனிச் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், மாவட்ட எஸ்.பி. மூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர்,பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை முதன்மை பொறியாளர்கள் உள்பட 12 பேர் பங்கேற்றனர்.

இந்நிலையில்,தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீரென ஆலோசனை நடத்தியதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று
ஜி.ராமகிருஷ்னன் தெரிவித்துள்ளார். அதிகார வரம்பை தமிழக ஆளுநர் மீறுவதாக குற்றம் சாட்டினார். மேலும் புதுச்சேரி போன்ற நிலை தமிழகத்துக்கு ஏற்பட கூடாது.எடப்பாடி அரசு பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை நிரூபிப்பது போல் உள்ளது என்று கூறினார்.

முத்தரசன்

தமிழ்நாட்டில் மத்திய பாஜக ஆட்சி நடக்கிறது என்பதற்கு ஆளுநரின் ஆலோசனை உதாரணம் என்று கூறியுள்ளார். எடப்பாடி தலைமையிலான அரசு இதை அனுமதிக்க கூடாது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்று எடப்பாடி கருதுகிறார் என்று குற்றம் சாட்டினார். தன்மானமோ சுயகவுரவமோ எடப்பாடி அரசுக்கு இல்லை என்று தெரிவித்தார்.

துரைமுருகன்:

மாவட்ட ஆட்சியர், போலீஸ் அதிகாரிகளுடன் அரசு கூட்டம் நடத்தவில்லை எனவே ஆளுநர் அந்த வேலையை செய்கிறார் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

ஈவிகேஎஸ்

தமிழகத்தின் உண்மையான முதல்வராக ஆளுநர் தான் செயல்படுகிறார் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

கு. ராமகிருஷ்ணன்

ஆளுநரின் ஆலோசனை மாநில உரிமைகளை மீறும் செயல் என்று கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் துரைசாமி

முதல்வர் சொல்வதன் அடிப்படையில் தான் ஆளுநர் செயல்பட வேண்டும் என்று வழக்கறிஞர் துரைசாமி கூறினார். அதிகாரிகளும் அரசின் அனுமதி பெற்றே ஆளுநரை சந்திக்க வேண்டும் என்று வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்தார். மாவட்ட அதிகாரிகள் ஆளுநரை பார்த்தது சட்டப்படி சரியல்ல என்று அவர் கூறினார்.

பழ.கருப்பையா

புதுச்சேரி, டெல்லியை போல தமிழகத்திலும் எடப்பாடி ஆட்சிக்கு எதிராக பாஜகவினர் திரும்பியுள்ளனர் என்று கூறினார். முக்கியமான மாற்றத்தை தமிழ்நாட்டில் இந்த சந்திப்பு ஏற்படுத்த போகிறது என்று தெரிவித்தார். மேலும் எடப்பாடி ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுவதாக பழ.கருப்பையா கருத்து தெரிவித்தார்.

மேலும் படிக்க