• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மருத்துவமனையில் கங்கை அமரன் சிகிச்சைக்காக அனுமதி

December 5, 2017 தண்டோரா குழு

பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன், கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல இசையமைப்பாளரும் இயக்குநர் வெங்கட்பிரபு, நடிகர் பிரேம்ஜியின் தந்தையுமான கங்கை அமரன் உப்புச்சத்து குறைபாடு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கங்கை அமரனை இசையமைப்பாளர் தேவா சந்தித்து நலம் விசாரித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம், ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது பா.ஜ.க சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் கங்கை அமரன். ஆனால், பணப்பட்டுவாடா காரணமாக, அந்தத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

தற்போது வருகின்ற 21-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது.இதில் பா.ஜ.க சார்பில் மீண்டும் கங்கை அமரன் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று பாஜகவின் வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க