October 2, 2018
தண்டோரா குழு
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இளைஞர்கள் மத்தியில் கதர் ராட்டை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் மிகப்பெரிய கதர் ராட்டையை தயாரித்து அறிமுகப்படுத்தி உள்ளனர்.
கோவையில் உள்ள தேச பக்த அமைப்பு மற்றும் லயன்ஸ் கிளப் ஆப் அரிஸ்டோ சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கதர் ராட்டை குறித்து இளைய சமுதாயத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கதர் ராட்டையை தயாரித்து காட்சிப்படுத்தி உள்ளனர்.
சுதந்திர போராட்டத்தின் ஒரு பகுதியாக,அந்நிய நாட்டு துணிகளை பகிஷ்கரிக்க மக்களுக்கு அழைப்புவிடுத்த காந்தி, கை ராட்டினம் மூலம் நூல் நூற்று கதர் துணிகளை தயாரித்து பயன்படுத்தினார்.எனவே அதுபோன்ற ராட்டையை அனைவரும் தெரிந்த கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் தற்போது இந்த ராட்டையை தயாரித்து உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கோவையை அடுத்த பந்தயசாலை பகுதியில் இந்த ராட்டை காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.இந்த ராட்டை,15 அடி நீளமும்,9 அடி உயரமும்,ஆறரை அடி அகலமும் கொண்டதாக உள்ளது.அந்நிய உடையை உடுத்தாமல்,இந்தியாவில் தயாரித்த கதர் ஆடைகளை உடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இது தயாரிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் தொடர்ந்து உலகத்திலேயே மிகப்பெரிய ராட்டையை உருவாக்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.ஏராளமான மாணவர்கள் பொதுமக்கள் இதனை பார்வையிட்டு சென்றனர்.