• Download mobile app
06 Aug 2026, ThursdayEdition - 3830
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பன்றி காய்ச்சலுக்கு மூன்று பேர் பலி

November 3, 2018 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் பன்றி மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் சிகிச்சை பெற்றுவந்த ஒரு சிறுவன் உட்பட இரண்டு பேர் நேற்று இரவு உயிரிழந்தனர்.

கோவை வெரைட்டி ஹால் சாலையில் உள்ள ஹவுசிங் யூனிட்டில் வசித்து வரும் ஆறுமுகத்தின் மகன் அமுதன்(5).இவர் கடந்த மாதம் 30 ம் தேதி விஷ காய்ச்சலின் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் இவருக்கு பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்யபட்டது.பின்னர் சிறுவனுக்கு பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதுஇருப்பினும் சிறுவனின் உடல்நிலை மோசமானதையடுத்து நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதேபோல திருப்பூர் மாவட்டம் தாசப்பா நகரைச் சேர்ந்த ராஜனின் மனைவி வசந்தா(63).இவர் கடந்த 31ஆம் தேதி பன்றிக் காய்ச்சல் பாதிப்பில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் நேற்று இரவு பதினொன்று நாற்பத்தைந்து மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதேபோல நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரனின் மனைவி சுமத்ரா (35).இவர் கடந்த 30ஆம் தேதி காய்ச்சல் பாதிப்பினால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இவருக்கு பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரிசோதனைகள் செய்யப்பட்டது.இந்த நிலையில் நேற்று இரவு இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.ஆனால் இவர் எந்த காய்ச்சல் பாதிப்பில் உயிரிழந்தார் என்பது மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்க மறுக்கப்படுகிறது.

கடந்த 30 மற்றும் 31 ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலினால் உயிரிழந்துள்ளனர்.கோவை அரசு மருத்துவர் கூறுவது போல நோயாளிகள் தங்களது நோய் முற்றிய பின்பு கடைசி நேரத்தில் தான் கோவை அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.அரசு மருத்துவமனையில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.ஆகவே காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் போதே உடனடியாக பரிசோதனை செய்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் உயிரிழப்பு ஏற்படாது.

மேலும் படிக்க