• Download mobile app
12 Jul 2026, SundayEdition - 3805
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் அதிகளவில் பன்றி காய்ச்சல் பரவி வருவதாக நா.கார்த்திக் எம்எல்ஏ குற்றச்சாட்டு

October 29, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் அதிகளவில் பன்றி காய்ச்சல் – டெங்கு காய்ச்சல் பரவி வருகின்றது – அரசு மருத்துவமனையில் ஆய்விற்கு பிறகு நா.கார்த்திக் எம்எல்ஏ குற்றச்சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டத்தில் பன்றி – டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது.கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு,பன்றி காய்ச்சலுக்கு பலியாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில்,கோவை மாநகர் திமுக மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ கோவை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவமனையின் டீன் அசோகனை சந்தித்து தகவல் கேட்டறிந்தார்.இதைத்தொடர்ந்து,டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் சிறப்பு வார்டுகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு,அங்கு நடைபெறும் சிகிச்சைகள் தொடர்பாக மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனைக்கு கடைசி நேரத்தில் வருவதால் சிகிச்சை பலனளிக்காமல் போவதாக,கோவை அரசு மருத்துவமனை டீன் தெரிவித்தார்.கோவை மாவட்டத்தை பொறுத்தவரை பன்றி காய்ச்சல்,டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதாக குற்றம்சாட்டியவர்,எந்த தெருவிற்கு சென்றாலும் காய்ச்சல் பரவி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.டெங்கு பரவி வருவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

கோவைக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்ததால் அவர் செல்லும் வழியெங்கும் கிட்டத்தட்ட 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு ராட்சத கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு அமைக்கப்பட்ட ராட்சத கட் அவுடில் மோதி ரகு என்ற வாலிபர் பலியானார்.இந்த கட் அவுட்டுகள் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் கூட வழக்கு,தான் தொடர்ந்ததில் இதற்கு விளக்கம் கேட்டு தலைமை செயலாளர்,டிஜிபி,மாவட்ட ஆட்சியரிடத்தில் உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளதாக தெரிவித்தார்”.இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க