October 1, 2018
தண்டோரா குழு
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி ஏழு பேர் விடுதலைக்கான கூட்டு இயக்கத்தினர் கோவையில் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசியல் சட்டம் 161 பிரிவை பயன்படுத்தி ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் என கூறப்பட்டதை அடுத்து,தமிழக அரசு பரிந்துரை செய்தும் இதுவரை ஆளுநர் நடவடிக்கை எடுக்கக்வில்லை என்பதைக் கண்டித்து கோவையில் ஏழு பேர் விடுதலைக்கான கூட்டு இயக்கத்தினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடந்த இந்த ஆர்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.