October 1, 2018
தண்டோரா குழு
கோவையில் பெற்ற மகளையே பாலியல் ரீதியாக துன்புறுத்திய தந்தை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது மகளும் மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வரும் கல்லூரி மாணவி தனது தாயுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் சுரேஷ்.இவர் சென்னை அடையாறில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு அந்நிறுவனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு கோவை அவினாசியிலுள்ள ரேவந்தா குழும நிறுவனத்தில் பொது மேலாளராக சேர்ந்துள்ளார்.
இதையடுத்து சென்னையில் மாடலிங் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டே கல்லூரியில் இரண்டாமாண்டு பயின்று வந்த தனது மகள் டயானா மற்றும் மனைவி ஸ்வர்ணலதா ஆகியோரையும் கோவைக்கு அழைத்து வந்ததுடன்,மகளை கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படிப்பில் சேர்த்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து சிங்காநல்லூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வரும் ஜோசப் சுரேஷ் அவ்வப்போது தனது மகள் என்றும் பாராமல் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த சூழலில் இன்று காலை டயானா மற்றும் அவரது தாய் ஸ்வர்ணலதா ஆகியோர் தனது தந்தை மீது கோவை புலியகுளம் காவல்நிலையத்தில் பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
ஆனால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதையடுத்து அவர்கள் இருவரும் ஜோசப் சுரேஷ் பணிபுரியும் நிறுவனத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்படவே பந்தைய சாலை காவல்நிலைய போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் டயானா மற்றும் அவரது தாய் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.ஆனால் ஜோசப் சுரேஷின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளதால் அவர் எங்கு சென்றார் என்பது தெரியாமல் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.மேலும் பெற்ற தந்தையே மகளென்றும் பாராமல் மாடல் அழகியாக நினைத்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.