• Download mobile app
01 Nov 2025, SaturdayEdition - 3552
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கூலி தொழிலாளி மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டம்

August 31, 2018 தண்டோரா குழு

கோவையில் கூலி தொழிலாளி மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.

கோவை மாவட்டம் கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்.இவர் அதேபகுதியைச் சேர்ந்த வேலுசாமி என்பவருக்கு சொந்தமான ரேவதி பந்தல் நிலையத்தில் வேலை செய்து வந்தார்.இந்நிலையில் கடந்த 29 ம் தேதி வேலைக்கு சென்ற மணிகண்டன் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.அந்நிறுவனத்தில் இருந்து உறவினர்களுக்கு அழைத்த ஊழியர்கள் மணிகண்டன் குடித்து விட்டு போதையில் கிடப்பதாகவும்,பந்தலில் இருந்து கீழே விழுந்து விட்டதாகவும் மாற்றி மாற்றி கூறியுள்ளனர்.

உறவினர்கள் சென்று பார்த்த போது தலையில் காயத்துடன் மணிகண்டன் உயிரிழந்து கிடந்துள்ளார்.இதையடுத்து மணிகண்டன் உடல் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்நிலையில் மணிகண்டன் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும்,வேலுசாமி உள்ளிட்டோர் அடித்தும்,கழுத்தை நெறித்து கொலை செய்திருப்பதாகவும் கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து கோவை அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர்.

மேலும்,வேலுசாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.தொண்டாமுத்தூர் காவல் துறையினர் வேலுசாமி தரப்பினருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும்,கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க