• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை செட்டிப்பாளையத்தில் பள்ளி சிறுவன் தற்கொலை

December 8, 2017

கோவை அருகே பள்ளிக்கு செல்லாத மாணவனை பெற்றோர் கண்டித்ததால், எறும்பு சாக்பீசை சாப்பிட்டு கல்லூக்குழியில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் செட்டிப்பாளையம் அருகே பெரியகுயிலி பகுதியை சேர்ந்தவர் எழுமலை. இவரது மகன் சிவா(13) 7 ம் வகுப்பு படிப்பை பாதியில் கைவிட்டு, ஓராண்டாக பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில்,பெற்றோர்கள் கண்டித்ததால் சிவா மற்றும் அவரது நண்பரான இடையர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் ஹரிஆனந்துடன்(15) சேர்ந்து எறும்பு சாக்பீஸை தின்று தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார். இதை பார்த்த இவர்களின் நண்பர் தினேஷ் அவரது பெற்றோர்களிடம் தலவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,எறும்பு சாக்பீஸை தின்று கல்லுகுழியில் குதித்த சிறுவன் சிவா உயிரிழந்தார்.அவரது ஹரி ஆனந்த் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும்,கல்லுக்குழியில் விழுந்த சிவாவின் உடல் 200 அடி அழத்தில் கிடந்தது. இறந்த சிவாவின் உடலை தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்ட செட்டிபாளையம் காவல்துறையினர் பிரேதப்பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க