• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து பா.ஜ.கவினர் போராட்டம்

December 11, 2017

கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக,இந்து கோவில்களை இடித்து தரை மட்டமாக்க வேண்டும் என கூறிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து,பாஜக வினர் திருமாவளவன் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து இன்று(டிச 11) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமாவளவன் உருவபொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட பா.ஜ.க.வினர் கோஷங்கள் எழுப்பியபடி ஆட்சியர் அலுவலகம் முன்பாக திரண்டனர்.இதனைத்தொடர்ந்து உருவபொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து கோஷங்களை எழுப்பி கண்டனத்தை பதிவு செய்தனர்.

மேலும், காவல்துறை திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,அடுத்த முறை கோவைக்கு திருமாவளவன் வந்தால் அவருக்கு பாஜக சார்பில் செருப்பு மாலை அணிவிக்கப்படும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க