• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நீதிமன்ற உத்தரவுகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக செயல்படுத்த வேண்டும் – திமுக வழக்கறிஞர்கள் மனு

December 1, 2017 தண்டோரா குழு

கோவையில் நீதிமன்ற உத்தரவுகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம்,திமுக வழக்கறிஞர் அணியினர் இன்று(டிச 1) மனு அளித்தனர்.

கோவை வ.உ.சி மைதானத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வரும் மூன்றாம் தேதி நடைபெற இருக்கின்றது. இதற்காக கோவை மாநகரம் முழுவதும் கட் அவுட்டுகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கடந்த 25ம் தேதி நூற்றாண்டு விழாவிற்காக வைக்கப்பட்டு இருந்த அலங்கார வளைவில் மோதி ரகுபதி என்ற இளைஞர் உயிரிழந்தார். இதனையடுத்து சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்  உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.இவ்வழக்கில் விதிமுறை மீறிய கட் அவுட்  மற்றும் பேனர்களை அகற்றவும்,பேனர்களை வைக்க அனுமதி பெற்று இருந்தாலும் பொதுமக்களுகு இடையூறு இருந்தால்  அவற்றை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்திரவிடப்பட்டது.

இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்திரவுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த திமுக வழக்கறிஞர் அணியினர் , நீதிமன்ற உத்திரவுகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹரிகரனிடம் மனு அளித்தனர்.

மேலும்,இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் மற்றும் மாநகர காவல் ஆணையர் ஆகியோரிடமும் மனு அளிக்க இருப்பதாகவும் திமுக வழகறிஞர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க