• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் மெளன அஞ்சலி

December 5, 2017 தண்டோரா குழு

கோவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏராளமான தொண்டர்கள் மெளன அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்து ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து தமிழகம்  முழுவதும் அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள அதிமுக தலைமை கழக அலுவலகமான இதய தெய்வ மாளிகையில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும்,கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே. அர்ஜுனன் தலைமையில் தொண்டர்கள் ஊர்வலமாக சென்று அவினாசி சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா சிலைக்கு சென்று மரியாதை செலுத்தினர்.

மேலும் படிக்க