• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் வேளாண் படிப்புக்கான கலந்தாய்வு இந்தாண்டு ஆன்லைனில் நடத்தப்படும்

May 14, 2018 தண்டோரா குழு

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு முதல் முறையாக இணையதள வழியாக நடைபெறவுள்ளது.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக இளமறிவியல் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு இணையதள வழியாக நடைபெறவுள்ளதாக பல்கலைகழக துணைவேந்தர் கே. ராமசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கே.ராமசாமி கூறுகையில்,

“மே மாதம் 18 -ம் தேதி முதல் இளமறிவியல் பட்டப்படிப்பு விண்ணப்பம் இணையதளம் மூலம் பதிவேற்றம் தொடங்கி ஜுன் மாதம் 17-ம் தேதி முடிவடைகிறது.

அதன் பின் ஜூன் 18 முதல் 20ம் தேதி வரை சிறப்பு ஒதுக்கீடுக்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். ஜூன் 22 அன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.ஜூலை 7 அன்று சிறப்பு ஒதுக்கீடுக்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.

முதல் முறையாக இணையதள வழியாக ஜூலை 9 முதல் ஜூன் 13 வரை முதல் கட்ட கலந்தாய்வும்,ஜூலை 23 முதல் ஜூலை 27 வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.
மேலும்,தொழிற்கல்விக்கான கலந்தாய்வு ஜூலை 16 அன்று நடைபெறும். அதே போல் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மற்றும் நிறுவனங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 17 மற்றும் ஜூலை 18 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

இணையதள வழியாக நடைபெறும் கலந்தாய்வில் சிலைடிங்(Sliding) முறை அறிமுகப்படுத்தவுள்ளது.இதனால் மாணவர்கள் கலந்தாய்வில் இடங்கள் இருந்தால் தங்கள் விருப்பப்படி மாற்றிக்கொள்ளலாம்.தனியார் கல்லூரிகளில் 65 சதவிதம் இடங்கள் பல்கலைக்கழக மூலமாக நிரப்பப்படும்,35 சதவீதம் இடங்கள் அந்தந்த கல்லூரிகள் நிரப்படும்.இதில் முறைகேடுகள் ஏற்பட்டால் அந்தந்த கல்லூரி நிர்வாகமே பொறுப்பு.

நடுவண் அரசால் நடத்தப்படும் தேசிய அளவிலான வேளாண் படிப்பிற்காண நுழைவு தேர்வின் மூலம் அரசு கல்லூரிகளில் 15% மாணவர்கள் சேர்க்கைக்கு இடம் ஒதுக்கீடு செய்யபடும்.மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்படும் வகையில் வரும் 21-ம் தேதி திறந்த வெளி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும்,இளையதள வழியாக கலந்தாய்வு நடைபெற உள்ளதால் யாரும் கோவைக்கு வரவேண்டியதில்லை” என்றார்.

மேலும் படிக்க