• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டொலான்ட் ட்ரம்பை இழிவுப்படுத்தும் சீனர்கள்

June 8, 2016 தண்டோரா குழு.

அமெரிக்காவின் ரிபப்பிளிக்கன் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொலான்ட் ட்ரம்ப் விந்தையாகவும் வில்லங்கமாகவும் பேசுவதில் வல்லவர். முஸ்லீம்களுக்கு அமெரிக்காவில் இடமில்லை என்றும், சீன அரசு அமெரிக்க மக்களின் வேலை வாய்ப்பையும், அமெரிக்க அரசின் லாபத்தையும், தட்டிப் பறிக்கிறது என்றும் ஒவ்வொரு கூட்டத்திலும் குற்றஞ்சாட்டிப் பேசிவருகிறார்.

இந்தக் குற்றச்சாட்டினால் கோபமடைந்த சீன மக்கள் ட்ரம்ப்பை இழிவுப் படுத்தும் விதமாக அவரின் பல வகையான உருவப்படங்களைக் கழிவறையில் உபயோகிக்கும் காகிதத்தில் அச்சடித்து இணைய தளத்தில் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

69 வயது பலம் வாய்ந்த தொழிலதிபரான ட்ரம்ப்பின் சிரித்த முகம், கோபமான முகம், கோணங்கித்தனமான முகம், போன்ற பல முகங்கள் கழிப்பறைகளில் மிதிபட வேண்டும் என்பது அவர்களின் நோக்கம்.

வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பப்படி எந்த முகத்தை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம்.
70 வர்த்தக நிறுவனங்கள் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் அலிபாபா மையத்தின் மூலம் ஆயிரக்கணக்கான சுருள்கள் அமெரிக்க பிரஜைகளாலேயே வாங்கப்படுகிறது.

மக்கள் அச்சுருளைக் கேவலமாக உபயோகப் படுத்தாவிட்டாலும் கூட இணைய தளத்திலிருந்து வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். 50 தேவைப் பட்டியலின் படி கிட்டத்தட்ட 5,000 சுருள்களுக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் இச்சுருள்கள் அமோகமாக விற்கப்படுகிறது என குங்டோ வெல் பேப்பர் இண்டஸ்ரியல் கம்பெனி தெரிவித்துள்ளது.

இப்பேப்பர்கள் 50 அமெரிக்க சென்ட்களுக்கு விற்கப்படுகின்றன. இ-பேயிலோ அல்லது அமேசானிலோ வாங்கினால் 30 அமெரிக்க சென்ட்க்கு வாங்கலாம்.

அமெரிக்க, பெண்கள் கால்பந்து அணியின் உறுப்பினரான சிட்னி லாரக்ஸ், ட்ரம்பின் உருவப்பட டாய்லெட் காகிதத்தை வாங்குவதில் முதன்மையானவர். உருவப்படம் மிக நேர்த்தியாக உள்ளது என்றும் சிலாகித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு இதே போல் அமெரிக்க அதிபர் பாரக் ஒமாவின் உருவப்படம் ரஷியாவில் இழிவு செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.

மேலும் படிக்க