October 31, 2017
தண்டோரா குழு
சீன நாட்டின் தேசிய கீதத்தை அவமதிப்பவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில், சீன நாட்டின் ஹாங்காங் மற்றும் மக்காவ் பகுதிகளில் பின்பற்றப்படும் “March of the volunteers” சட்டத்தை பின்பற்ற தவறினால், அவர்களுக்கு 15 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்படும் என்னும் புதிய சட்டத்தை அந்த நாடு கொண்டு வந்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு, ஹாங்காங்கில் உலக கால்பந்து கோப்பை தகுதிச் சுற்று போட்டி நடந்தது. அந்த போட்டியை காண வந்த ரசிகர்கள் சீனா தேசியகீதத்தை அவமதித்தனர். இதையடுத்து, ஃபிபா அமைப்பினர், கால்பந்து சங்கத்திற்கு அபராதம் விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.