• Download mobile app
11 May 2026, MondayEdition - 3743
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னையில் குழந்தை கடத்தல் சேலத்தில் புகார்

July 30, 2016 தண்டோரா குழு

சென்னையைச் சேர்ந்த யாஸ்மின் என்பவரின் 3 வயதுக் குழந்தையை பட்டிணம்பாக்கத்தை சேர்ந்த ரவுடி ஒருவர் கடத்தியதாக சேலம் மாநகர காவல் ஆணையரிடம் புகார்.

ஆன்லைன் வியாபாரத்தில் ரவுடி ஒருவர் யாஸ்மினை நம்பி பணம் முதலீடு செய்துள்ளார். ஆனால் அந்தத் தொழில் விரைவில் நஷ்டமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நஷ்டத்திற்கு யாஸ்மின் தான் காரணம் என்று கூறியும் முதலீடு செய்த பணத்தை யாஸ்மின் திருப்பி வழங்க வேண்டும் என்றும் மிரட்டல் விடுப்பதாக கூறப்படுகிறது.

மேலும் யாஸ்மினின் குழந்தையை பட்டிணம்பாக்கத்தை சேர்ந்த ரவுடி கடந்த 1 மாதத்திற்கு முன்பு கடத்தி மறைவிடத்தில் வைத்திருப்பதாகவும் பணத்தை திருப்பிக் கொடுத்தால் மட்டுமே குழந்தையை கொடுப்பதாகவும் தெரிவித்ததாக யாஸ்மின் புகார் கொடுத்துள்ளார்.

சேலத்தில் உறவினர் வீட்டுற்கு வந்த யாஸ்மின் தனது குழந்தையை மீட்டுத்தருமாறு சேலத்தில் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

மேலும் படிக்க