October 14, 2017
தண்டோரா குழு
சென்னையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடமாடும் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெங்கு கொசுக்களை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை வளசரவாக்கத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடமாடும் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன.மேலும்,கொசு மருந்து அடிக்க பயன்படுத்தப்படும் இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளது.இது தவிர டெங்கு அறிகுறிகள் உள்ள பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.