• Download mobile app
21 Jun 2026, SundayEdition - 3784
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அய்யா என் செருப்பைக் காணோம்! வாங்கி 2 நாள் தான் ஆகிறது – போலீசில் புகார் அளித்த தொழிலதிபர் !

November 26, 2018 தண்டோரா குழு

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது செருப்பை காணவில்லை என காவல் நிலயத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் ராஜேஷ்குப்தா(55) தொழிலதிபரான இவர்,பாரி முனையில் ஹார்டுவேர் கடை நடித்தி வருகிறார்.இவர் ரத்த பரிசோதனை செய்வதற்காக சென்ற போது தனது செருப்பை தொலைத்துள்ளார்.

இது தொடர்பாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரை படித்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.அந்த புகாரில்,இன்று தண்டையார் பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் சர்க்கரை நோய் பரிசோதனை மையத்திற்கு சென்றேன்.அந்த மையத்தின் வாசலில் என்னுடைய 800 ரூபாய் மதிப்புள்ள செருப்பை கழற்றி வைத்து சென்றேன்.பரிசோதனை முடிந்து வந்து பார்த்தபோது வாசலில் விட்டு சென்ற என்னுடைய செருப்பை காணவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்தான் அந்த செருப்பை வாங்கினேன்.ஆகையால் எனது செருப்பை திருடியவர்களை கண்டுபிடித்து செருப்பை மீட்டு தர வேண்டும் என புகார் தெரிவித்தார்.

இதையடுத்து,தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.படத்தில் வருவது போல இவர் செருப்பை காணவில்லை என்று புகார் அளித்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க