• Download mobile app
17 Oct 2026, SaturdayEdition - 3902
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராம்குமார் கொலையில் சந்தேகம் இருப்பதால் உரிய விசாரணை வேண்டும் – திருமாவளவன்

September 18, 2016 தண்டோரா குழு

ராம்குமாரின் மரணம் உண்மையிலேயே தற்கொலைதானா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் உரிய விசாரணை வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார்.

ஈரோட்டில் நடைபெறும் தலித் கலைவிழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ராம்குமாரின் மரணத்தில் வேறு பின்னனி உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் உடலை உடனடியாக அடக்கம் செய்து சம்பவத்தை மூடி மறைக்காமல் உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

சுவாதி கொலை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டது முதல்,தனக்கும் கொலைக்கும் சம்பந்தம் இல்லை என அவர் பலமுறை கூறியும் காவல்துறை அதனை அலட்சியம் செய்ததாகவும் அவர், பிளேடால் கழுத்தை அறுத்தது போன்ற காட்சிகளை வெளியிட்ட காவல்துறை ,கழுத்தை அறுத்தபோது ஏன் வீடியோ எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பிய திருமாவளவன்,கொலை சம்பவத்தில் கூலிப்படை தொடர்பு குறித்த விசாரணையை காவல்துறை தவிர்த்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும், இதேபோல் ஒருதலை காதல் மட்டுமே சுவாதி கொலைக்கு காரணமாக இருக்க முடியாது எனவும், இந்த ஐய்யத்தை போக்க வேண்டியது அரசின் கடமை என்றும் வலியுறுத்திய அவர் ராம்குமாரின் மரணம் உண்மையிலேயே தற்கொலைதானா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் உரிய விசாரணை வேண்டும் எனக் கூறினார்.

மேலும் படிக்க