• Download mobile app
22 Mar 2026, SundayEdition - 3693
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிபிஐ புதிய இயக்குநராக நாகேஸ்வர் ராவ் நியமனம்!

October 24, 2018 தண்டோரா குழு

சிபிஐ இயக்குநர்கள் அலோக் வர்மா,ராகேஷ் அஸ்தானா இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில்,புதிய இயக்குநராக நாகேஸ்வர் ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மாவுக்கும்,சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.ராகேஷ் அஸ்தானா மீது தொடக்கத்தில் சில ஊழல் புகார்கள் எழுந்ததை சுட்டிக்காட்டி,அவருக்கு சிபிஐ சிறப்பு இயக்குநர் பதவி வழங்க தொடக்கத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும்,இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீது தொடர்பான வழக்கில் லஞ்சம் பெற்றதாக அலோக் வர்மாவும்,ராகேஷ் அஸ்தானாவும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர்.இதற்கிடையில்,ராகேஷ் அஸ்தானா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து,இரு தினங்களுக்கு முன் சிபிஐ தலைமை அலுவலகத்திலேயே சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி,போலீஸ் துணை கண்காணிப்பாளர் தேவேந்திர குமாரை கைது செய்தனர்.

இதனையடுத்து,பனிப்போரில் ஈடுபட்டுள்ள சிபிஐ அதிகாரிகள் அலோக் வர்மா,ராகேஷ் அஸ்தானாவை பிரதமர் மோடி நேரில் அழைத்து தனித்தனியாக சந்தித்தார். அப்போது,பிரதமர் மோடியிடம் இருவரும் மாறிமாறி குற்றச்சாட்டுக்களை முன் வைத்ததாக கூறப்படுகிறது.அலோக் வர்மா,ராகேஷ் அஸ்தானா மீது பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில்,இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். அலோக் வர்மா கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிபிஐயின் தற்காலிக இயக்குநராக நாகேஸ்வர் ராவை மத்திய அரசு நியமித்தது.

தெலங்கான மாநிலம் வாரங்கலை சேர்ந்த நாகேஸ்வர் ராவ்,ஒடிஷாவின் 1986-ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்தவர்.இதற்கு முன்பாக பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார் நாகேஷ்வர் ராவ்.ரயில்வே காவல் துறையின் கூடுதல் இயக்குனராக பதவி வகித்த நாகேஷ்வர் ராவ்,கடைசியாக சிபிஐ இணை இயக்குனராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க