• Download mobile app
27 Jul 2024, SaturdayEdition - 3090
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

CA படிப்பதற்காக கோவை மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு !

November 30, 2023 தண்டோரா குழு

CA படிப்பதற்காக நமது கோவை மாணவ மாணவிகள் சென்னை சென்று பயிற்சி பெற்று வந்த நிலையை மாற்றி கோவையை சார்ந்த ஆடிட்டர் விஜயலட்சுமி தலைமையில் சென்னையிலிருந்து மிகச் சிறந்த ஆசிரியர்களை கோவைக்கு வரவழைத்து தணிக்கையாளர் பயிற்சி அளிக்க 2009ம் ஆண்டு BEST Academy என்ற மையத்தை துவக்கினார்.

மேலும் கடந்த 14 ஆண்டுகளாக சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தற்போது தணிக்கையாளர்களாக உள்ளனர்.
இதுவரை ICAI-ஆல் இந்தியா ரேங்க் பட்டியலில் 10 மாணவ மாணவிகளை குறுகிய காலத்தில் இவர்களது சிறப்பான பயிற்சியின் மூலம் உருவாக்கியுள்ளார்கள் . BEST Academy தணிக்கையாளர் பயிற்சி மையம் காந்திபுரம் இரண்டாவது வீதியில் செயல்பட்டு வருகிறது.

BEST Academy ,தனது அடுத்த கட்ட நகர்வாக 40 வருட அனுபவமிக்க இந்தியா முழுவதும் 39 நகரங்களில் 75 கிளைகள் கொண்ட மிகப்பெரிய தணிக்கையாளர் பயிற்சி நிறுவனமான J K SHAH ,a Varenda Enterprise நிறுவனத்துடன் இணைந்து பயிற்சி வழங்க உள்ளது.இந்த இணைப்பு விழா வருகின்ற 02-12-2023 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

JK SHAH, a Varenda Enterprise பயிற்சி நிறுவனமானது இந்தியா முழுவதும் 500000 (5 லட்சதிற்கும் )மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு தணிக்கையாளர் பயிற்சி அளித்த மிகச் சிறந்த பயிற்சி மையமாக உள்ளது. இங்கு இந்தியா முழுவதும் உள்ள தலைசிறந்த பயிற்சியாளர்களை கொண்டு தணிக்கையாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது .இந்த பயிற்சி மையத்திலிருந்து ICAI -ஆல் இந்தியா ரேங்க் பட்டியலில் -1904 மாணவ மாணவிகள் இடம்பெற்றுள்ளனர்.

இன்று சர்வதேச அளவில் பிரபலமாக விளங்கும் ACCA(UK), CMA( USA) , CPA(USA ) ஆகியவற்றிற்கும் இங்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.J K SHAH a Varenda Enterprise நிறுவனமானது மாணவ மாணவிகளின் நலனைக் கருதி சாஸ்திரா , அமிர்தா பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் CA பயிலும் மாணவர்களுக்கு B.Com ., பட்டம் பெற்றவும்,மேலும். B.Com., MBA.,பயிலும் மாணவர்களுக்கு
ACCA பாட திட்டத்தின் பல பாடங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க