• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவர் ஆறு பேருக்கு மறுவாழ்வு அளித்தார்

October 11, 2016 தண்டோரா குழு

ஈரோடு அருகே சாலை விபத்தில் மூளைசாவடைந்த கல்லூரி மாணவர் நிர்மல்குமாரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதன் மூலம் ஆறு பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் 17 வயது வாலிபர் நிர்மல் குமார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நல்லாம்பட்டி கிராமத்தில் தந்தை குழந்தைவேல்(விவசாயி) மற்றும் தாயார் சகுந்தலா அவர்களுடன் வசித்து வந்தார்.

கடந்த 10-ந்தேதி காலை 8 மணியளவில் வீட்டிலிருந்து கல்லூரிக்கு அவரது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பேருந்தின் மீது இருசக்கரவாகனம் மோதியதில் நிர்மல் குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஹெல்மட் அணிந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரை உடனடியாக ஈரோடு அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் கடந்த 02-ந்தேதி அன்று மூளைச்சாவு அடைந்ததாக கே.எம்.சி.எச் மருத்துவர்களும் மற்றும் கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்களும் உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து அவரது தந்தை குழந்தைவேல் அவர்கள் நிர்மல் குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தார்.

இதன்படி கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகம் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், இருதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கும் மற்றும் கண்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல G.பழனிசாமி கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். உடல் உறுப்பு தானம் வழங்கிய நிர்மல் குமாரின் குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

மேலும் படிக்க