• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாயன் கலாச்சாரம் மறைந்து போனதற்கான காரணம் வழிகாட்டிய அதிசய நீலத் துளைகள்.

June 21, 2016 தண்டோரா குழு

மத்திய அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையோரமாக உள்ள நாடு பெலிஷே ஆகும். அந்நாட்டுக்கு அருகில் உள்ள மிகப் பெரிய நீர்மூழ்கிப் புதைகுழி அல்லது கடலடிக் குகையாகக் கருதப்படும் அதிசய நீலத் துளை உண்டாகுகிறது.

தண்ணீரில் எளிதில் கலக்க கூடிய சுண்ணாம்பு மற்றும் ஜிப்சம் போன்ற இரசாயன பொருள்கள் பூமிக்குக் கீழ் உள்ள தண்ணீரில் கலந்து, காலப்போக்கில் அவை வற்றிபோய் விடுவதால் பூமியின் கீழ் வறண்ட இடமாக மாறிவிடுகிறது. இதனால் தான் புதை குழிகள் ஏற்படுகின்றன.

பனி மலைகளில் இருந்து வெப்ப நிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் உருகத் தொடங்கியதால் கடலின் தண்ணீர் அளவு அதிகரித்து உள்ள இடங்களில் இவை காணப்படுகின்றனர். இவை பவள திட்டுக்கள் மற்றும் சுண்ணாம்பு கற்களால் ஆன கடல் குகைகள் ஆகும். இங்குக் காணப்படுகிற தண்ணீர் குடிக்க ஏதுவாகவும், உப்பாகவும், சில வேளைகளில் இரண்டும் கலந்ததாக இருக்கும். இந்தக் குகை வழியாக கடலுக்கடியில் நீந்திச் செல்லவும் முடியும்.

உலகின் மிக ஆச்சரியமான 10 இடங்களில் மக்கள் அதிகமாக விரும்பும் இடம் எது என்று ஒரு ஆய்வு எடுக்கப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் பெலிஷேயின் காணப்படுகிற இந்த நீலத் துளை தான் சுற்றுலா பயணிகளுக்கும் நீர்மூழ்கிப் பிரியர்களுக்கும் மிகப் பிரசித்தமான இடம் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹௌச்டன் என்னும் இடத்தில் அமைந்தது உள்ள பிரபல ரைஸ் பல்கலைக்கழகத்தின் வண்டல் பகுப்பாய்வு நிபுணர்கள் சமீபத்தில் தெரிவித்துள்ள அறிக்கையின்படி ஆயிரம் ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய வறட்சி என்று தெரியவந்துள்ளது.

மேலும் மாயன் கலாச்சாரம் எப்படி அழிவிற்கு வந்து இருக்கக் கூடும் என்று ஆரட்சியாளர்களை அறியவைத்துள்ளது. இந்தக் கலாச்சாரம் அழியக் காரணமாக இருந்ததற்கு இந்த நீலத் துளை ஓர் சான்று என்று புவியியல் விஞ்ஞானி அன்ட்ரே ட்ரொக்ஸ்லெர் அறிவித்து உள்ளார்.

இதில், யுக்கட்டன் குடாநாட்டில் நிலவிய மாயன் நாகரிகம் கி.பி 800 மற்றும் 1,000 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பூமியில் பல காலம் மழை பெய்யாது கடும் வறட்சி ஏற்பட்டதால் அழிந்திருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கான மூலக்கூறு அடிப்படையிலான சான்று பெலிஷே நீலத் துளையில் கிடைத்திருப்பதாகவும் அவர் விளக்கியுள்ளார்.

தென் அமெரிக்க கண்டத்தில் கௌதமாலா, எல் சல்வடோர், ஹொன்டுரஸ் மற்றும் தென் மெக்ஸிக்கோ போன்ற நாடுகளில் இன்னமும் காணப்படும் மாயன் கலாச்சார மக்கள் நிர்மாணித்த கோட்டைகள், ஆலயங்கள், மற்றும் கல்லறைகளின் சிதைவுகள் போன்றவை கி.பி 900 ஆம் ஆண்டளவில் அவர்களால் கைவிடப்பட்ட பகுதிகளாகும்.

ஆனால் சுமார் 5 நூற்றாண்டுகளாக இப்பகுதிகளில் நிலவிய இந்த மாயன் கலாச்சாரம் திடீரென அவர்களால் ஏன் கைவிடப்பட்டது என்பது பல ஆண்டுகளாகவே விஞ்ஞானிகளைக் குழப்பிக் கொண்டிருக்கும் விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க