• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உ.பி.யில் பாஜக முதல்வர் வேட்பாளர் யார்?

November 12, 2016 தண்டோரா குழு

உத்தரப் பிரதேசத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் முனைப்பாக இறங்கிவிட்டன. 2017ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் தற்போதே பணிகளைத் தொடங்கிவிட்டன.

கட்சிகளுக்கு இடையே கூட்டணிகளும் இன்னும் முடிவாகவில்லை. தற்போதைய நிலையில், முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ கட்சி, பாரதீய ஜனதா கட்சி ஆகியவை களத்தில் இருக்கின்றன.

காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே தாங்கள் வெற்றி பெற்றால், ஷீலா தீட்சித் தான் முதலமைச்சர் என்று அறிவித்து விட்டது. இந்நிலையில் உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பாக பாஜக திட்டங்களை அதன் தலைவர் அமித் ஷா சனிக்கிழமை வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

உத்தரப் பிரதேசத்தில் பா. ஜ.க. சார்பில் நிறுத்தப்படும் முதல்வர் வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படவில்லை. இங்கு மூன்று திட்டங்களுக்கு பாஜக முன்னுரிமை அளிக்கும். ஒன்று உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துதல் அடுத்து வேலை வாய்ப்பு வசதிகள், சட்டம் ஒழுங்கை மேம்படுத்துதல்.

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை இரட்டை இலக்கத்துக்கு கொண்டு செல்லும் கிரியா ஊக்கியாக உத்தரப் பிரதேசத்தை உருவாக்குவோம் என்றார்.

மேலும் படிக்க