• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கட்டாயம் உருவாகுமா பில்லா 2018?

June 6, 2016 தண்டோரா குழு

தமிழ் திரையுலகில் தற்போது திரைக்கதைக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது போலும். அதிகளவில் ரீமேக் படங்கள் வெளிவருகின்றன. அதிலும் குறிப்பாக பழைய தமிழ்ப் படங்களையே மீண்டும் எடுத்து வருகின்றனர். அதில் ஒரு சில படங்கள் வெற்றி பெற்றதை அடுத்துப் பல இயக்குநர்களும் நடிகர்களும் பழைய படங்களின் ரீமேக்கில் நடிக்கவும், இயக்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதில் வெங்கட் பிரபு ஒரு படி மேலே போய், ஏற்கனவே ரீமேக் செய்யப்பட்டு பார்ட் டூ எல்லாம் வந்த பில்லா படத்தை நடிகர் சிம்புவை வைத்து மீண்டும் ரீமேக் செய்ய இயக்குநர் வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார்.

ரஜினி நடிப்பில் வெளியான பில்லா படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன், அஜித்தை வைத்து ரீமேக் செய்து கடந்த 2008ல் வெளியிட்டார். அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தொடர்ந்து வெளியான பில்லா 2வது பாகம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் பில்லா படத்தை நடிகர் சிம்புவை வைத்து எடுக்க இயக்குநர் வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவாக உள்ள பில்லா 2018 ல் நடிக்கச் சம்மதமா என சிம்புவிடம் கருத்து கேட்டிருந்தார். இதற்குப் பதில் அளித்த சிம்பு பிறந்தது முதலே ரெடி தான் என்று பதில் அளித்திருக்கிறார். இதனால் மூவரும் இணைந்து இப்படத்தை எடுத்து
வெளியிடுவார்களா அல்லது கைவிட்டு விடுவார்களா என இப்போது கோலிவுட் வட்டாரம் பரபரப்பாக பேசத்துவங்கியுள்ளது.

மேலும் படிக்க