• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகியது ஏன்? பாக்யராஜ் விளக்கம்

November 2, 2018 தண்டோரா குழு

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கே.பாக்யராஜ் கடிதம் வெளியிட்டுள்ளார்.இயக்குனர் பாக்யராஜ் கடந்த 6 மாதத்திற்கு முன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.இதற்கிடையில்,ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதையும் செங்கோல் என்ற கதையும் ஒன்று என்று இயக்குனர் வருணனுக்கு ஆதரவாக பாக்யராஜ் குரல் கொடுத்திருந்தார்.

இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்று படத்தின் டைட்டிலில் வருணனின் பெயர் போடுவதாக சன் பிக்ஸர் நிறுவனம் அறிவித்ததை தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.இந்நிலையில்,தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கே.பாக்யராஜ் கடிதம் வெளியிட்டுள்ளார்.

அதில்,சர்கார் பட கதை விவகாரத்தில் பல அசெளகரியங்களை நான் சந்திக்க வேண்டி இருந்தது.இயக்குநர் முருகதாஸிடம் கெஞ்சியும் உடன்படாததாலேயே,சர்கார் பட கதையை வெளியே சொல்லவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்.இருந்தாலும் தவறு என உணர்ந்து சம்பந்தப்பட்ட சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கோருகிறேன்.

நான் திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டதே அதற்கு காரணம் என்று நினைக்கிறேன். இந்த நிலையில் முறையாக தேர்தல் நடத்தப்பட்டு மீண்டும் பொறுப்புக்கு வருவதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.தேர்தல் நடத்துவது வீண் செலவு என்று நினைக்கலாம்.ஆனால் சங்கமே வீணாக போவதைக்காட்டிலும் பணம் வீணாவது தவறில்லை என்று தோன்றுகிறது.தேர்தல் நடத்தப்பட்டால் நான் மீண்டும் தலைவர் பதவியில் போட்டியிட்டு மெஜாரிட்டி ஓட்டுகளோடு வெற்றி பெறுவேன்.தொடர்ந்து கடமையோடு செயல்படுவேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க