• Download mobile app
23 Oct 2025, ThursdayEdition - 3543
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தண்ணீருக்குப் பதில் பீரில் நீச்சல் குளம்

July 28, 2016 தண்டோரா குழு

உலகின் வித்தியாசமான முதல் நீச்சல் குளம் ஒன்று ஆஸ்திரிய நாட்டில் உருவாக்கப் பட்டுள்ளது. இதில் என்ன ஆச்சரியம் என்று கேட்கிறீர்களா? இந்த நீச்சல் குளத்தில் தண்ணீருக்குப் பதில் பீரை ஊற்றிக் குளிப்பது தான் ஆச்சரியம்.

v3

ஆஸ்திரியா நாட்டில் பீர் மதுபானத்தைக் கொண்டு உலகிலேயே முதல் முதலாக நீச்சல் குளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தண்ணீருக்கு பதில் பீரை ஊற்றி குளித்து அந்நாட்டு மக்கள் மகிழ்கின்றனர்.

நீச்சல் குளவடிவிலான ஒரு சூடான தொட்டியில் பீரினை ஊற்றி குளிப்பதோடு மட்டுமல்லாமல் குளியலுக்கு இடையே பீர் அருந்தவும் செய்கின்றனர். மேலும், பீரை ஊற்றிக் குளிப்பதன் மூலம் உடல் சுருசுருப்படையும் மேனி பளபளக்கும், தோல் மிருதுவாகும் என நீச்சல் குள நிர்வாகிகள் விளம்பரம் செய்கிறார்கள்.

v1

இதனால் இங்கு இந்த நீச்சல் குளத்தில் குளிக்க மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது. இதுமட்டுமின்றி குளிக்க முன்கூட்டியே புக்கிங் செய்வது அவசியமாம். ஆஸ்திரியா வரும் சுற்றுலா பயணிகள் தவறாமல் இங்குச் செல்கிறார்களாம்.

மேலும் படிக்க