• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விழிப்புணர்வுக்காகக் கால்பந்து விளையாடிய பாபா ராம் தேவ்

July 26, 2016 தண்டோரா குழு

தன்னுடைய செய்கையால் அடிக்கடி சர்ச்சையில் மாட்டிக்கொள்ளும் யோகா ராம் தேவ் பாபா தற்போது ஒரு புதிய முயற்சியில் இறங்கி உள்ளார்.

யோகா குருவான பாபா ராம்தேவ் பிரதமர் மோடியின் திட்டங்களை பிரபலப்படுத்தும் விதமாக நடைபெற்ற கால்பந்து போட்டியில் கலந்துகொண்டு ஊக்கத்தை ஏற்படுத்தினார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் “தூய்மை இந்தியா” மற்றும் “பெண் குழந்தைகள் பாதுகாப்பு” ஆகிய இரு திட்டங்களை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இந்திய தேசத்தின் தலைநகரான புது டில்லியில் உள்ள நேரு மைதானத்தில் கால்பந்து போட்டி ஒன்று நடத்தப்பட்டது.

இதில் என்ன விசேஷம் என்றால், கனரக தொழில் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை இணை அமைச்சர் பபுள் சுப்ரியோ, எம்பிக்கள் அணியைத் தலைமை தாங்கினார் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் அணியின் கேப்டனாக அபிஷேக் பச்சன் இருந்தார். மேலும் அந்த அணியில் ரன்பீர் கபூர், டினோ மோரியா மற்றும் ஷப்பிர் அஹ்லுவாலியா ஆகியோர் விளையாடினர்.

இதில் எம்பிக்கள் அணிக்காக யோகா குரு ராம்தேவ் கால் பந்து விளையாடி அசத்தினார். அசால்டாக இவர் விளையாடியது நன்கு தேர்ச்சி பெற்ற விளையாட்டு வீரர் அளவுக்கு இருந்ததால் பார்வையாளர்கள் அதிசயித்து மகிழ்ச்சி கரகோஷம் எழுப்பினர்.

தான் எதிர் அணியில் விளையாடுகிறேன். நாம் இந்திய தேசத்திற்காக விளையாடுகிறோம் என்று இளைஞர்கள் அணியிடம் தெரிவித்ததாகவும் நீண்ட வாழ்க்கைக்காகப் பதஞ்சலி பொருட்களைத் தருவதாக நடுவரிடம் சத்தியம் செய்தேன் என்று எம்பிக்கள் அணித் தலைவர் பபுள் சுப்ரியோ தெரிவித்தார்.

மேலும், போட்டியின் முடிவில், பாலிவுட் நட்சத்திர அணி 10-0 கோல் கணக்கில் போட்டியை வென்றது. மேலும், வீரர்களுக்குத் தனது பதஞ்சலி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட பானங்களை ராம்தேவ் பாபா வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க